மனித திறன்கள், மனித வள முகாமைத்துவம், மற்றும் உயர் தலைமத்துப் பயிற்சினை இந்தியாவில் தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள National Institute of Labour Economics Research and Development கல்லூரியில் ஒருமாத கால வதிவிடப் பயிற்சிநெறியாக நடைபெறவுள்ளது.
Posted on:
2019-03-26 06:05:53
உயர் தலைமத்துவப் பயிற்சிக்காக யாழ் இந்து மகளிர் கல்லூரி உதவி அதிபர் லயன் ஜெ.றஜீவன் புதிடில்லி பயணம்.
உலகலாவிய ரீதியாக அரச அலுவலர்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் புலமைப் பரிசில் பாடநெறியைப் பயில்வதற்காக யாழ் இந்து மகளிர் கல்லூரியின் உதவி அதிபர் லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மனித திறன்கள், மனித வள முகாமைத்துவம், மற்றும் உயர் தலைமத்துப் பயிற்சினை இந்தியாவில் தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள National Institute of Labour Economics Research and Development கல்லூரியில் ஒருமாத கால வதிவிடப் பயிற்சிநெறியாக நடைபெறவுள்ளது.
சர்வதேச ரீதியாக பல பயிற்சி நெறிகளைப் பெற்ற இவர் சென்ற வருடம் இலங்கை அதிபர் சேவைப் பரீட்சை அதன் பின்னர் நடைபெற்ற ஒருமாத உள்ளப் பயிற்சியில் அதி உயர் புள்ளிகளைப் பெற்று இலங்கை கல்வி அமைச்சின் புலமைப்பரிசில் பெற்று மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உயர் தலைமைத்துவ பயிற்சியைப் பெற்றுக் கொண்டார்.
மேலும் சர்வதேச லயன்ஸ் கழகங்களின் ஏற்பாட்டில் நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற உயர் தலைமைத்துவ பயிற்சியையும் பெற்றுக் கொண்டவர் ஆவர்.
மேலும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அதிக தலைமத்துவப் பயிற்களைப் பெற்றுக் கொண்ட இவர் சர்வதேச லயன்ஸ் கழகங்களின் இலங்கை 306 B1 மாவட்டத்தின் பிராந்திய இணைப்பாளராக கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.